Perambalur: The protest demonstration that VCK had planned to hold tomorrow condemning DMK MP A. Raja has been cancelled!
பெரம்பலூரில் இன்று நடந்த விசிக அவசர கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விசிக தலைவரை விமர்சித்ததை கண்டித்து நாளை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்பாட்டம் நடத்த தீர்மானம் செய்யப்பட்டது.
அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது என பெரம்பலூர் சட்ட தொகுதி விசிக மாவட்ட செயலாளர் கி.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். இருதரப்பிலும் சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதால், பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் தலைவர் தொல்.திருமாளவன் அறிவுறுத்தலின் கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.