பெரம்பலூர்: 14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம்; அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

schedule
2026-01-27 | 14:00h
update
2026-01-27 | 14:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The scheme to administer HPV vaccines to 14-year-old girls was launched by Minister Sivasankar!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற உலக மகளிர் உச்சி மாநாட்டில், கர்ப்ப வாய் புற்றுநோயினை தடுக்கும் வகையில் 14 வயதுடைய சிறுமிகளுக்கு HPV (Human Papillom Vrum) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டங்கள் எல்லாம் மகளிர் முன்னேற்றத்தில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னாடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. மகளிர் விடியல் பயணம் திட்டம்,புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுழல்நிதி என மகளிரை முன்னிலைப்படுத்தி ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றார்.
அனைத்து திட்டங்களும் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவக்கூடிய தொலைநோக்குத் திட்டங்களாகும். அந்த வரிசையில், பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் அதிக அளவில் வருவதை கண்டறிந்து அதை தடுப்பதற்கு 14 வயதுடைய சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல் கட்டமாக அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
அரசின் மூலம் செயல்படுத்தப்படும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், 11 வகையான தடுப்பூசிகளை கர்ப்பிணித் தாய்மார்களுக்கும். குழந்தைகளுக்கும் அளித்து 12 வகையான நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக இந்த கர்ப்பவாய் புற்றுநோய் தாக்கம் உள்ளது. இந்த தடுப்பூசியானது கர்ப்பவாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் 99.7 சதவீதம் தடுக்கும்.

Advertisement

தமிழ்நாட்டில் கர்ப்பவாய் புற்றுநோய் அதிகம் பாதித்த அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நமது பெரம்பலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது மாவட்டத்தில் 24 பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 98 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 14 வயதான 2,712 மாணவிகளுக்கு இரண்டு தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே, மாணவிகளின் எதிர்கால நலன்கருதி செலுத்தப்படும் இந்த தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளிடமும், அவர்களின் பெற்றோரிடத்திலும் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் விரவாக எடுத்துக்கூற வேண்டும்.

இந்த தடுப்பூசியினை தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ள சுமார் ரூ.3000 முதல் ரூ.5,000 வரை செலவாகும், ஆனால் உங்களைத்தேடி வந்து அரசு இந்த தடுப்பூசியினை இலவசமாக செலுத்தி வருகின்றது என்ற விபவரத்தை அனைவருக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்தார்.

 கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ பிரபாகரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கொ.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) செல்வக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சேசு, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரியா, வட்டாட்சியர் சின்னத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர், மற்றும் அரசு அலுவலர், சுகாதார பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.01.2026 - 14:23:41
Privacy-Data & cookie usage: