பெரம்பலூர்: மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் திட்டம்; அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

schedule
2026-01-05 | 19:01h
update
2026-01-05 | 19:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The scheme to provide free laptops to students was launched by Minister Sivashankar!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரி இறுதியாண்டு பயிலும் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்திலிருந்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,473 மாணவ மாணவிகளுக்கு ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந. மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ எம்.பிரபாகரன் முன்னிலையில், வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,473 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.21,650 வீதம் மொத்தம் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் வகையில் வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 265 மாணவிகளுக்கு லேப் டாப் கம்யூட்டர்களை வழங்கி, பணிகளை தொடங்கி வைத்தார்.

Advertisement

கல்வி அனைவருக்கும்! உயர்வு ஒவ்வொருவருக்கும்! என்ற நோக்கத்துடன் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த DELL, ACER, HP போன்ற உலக தரமான நிறுவனங்களின் லேப் டாப்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இதில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் நிறுவப்பட்டுள்ளது. MS Office 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்கு புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Proவின் 6 மாத சந்தாவும் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. லேப்டாப் கேரி பேக்கும் வழங்கப்பட்டது.

அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் IT, மென்பொருள் உருவாக்கம் Software Development, தரவு உள்ளீடு (Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Designing), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் வாய்ப்புகளை பெரும் புதிய தலைமுறை என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.

மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஒன்றிய செயலாளர் அழகு.நீலமேகம், தி.மதியழகன், சி. ராஜேந்திரன், குன்னம் வட்டாட்சியர் திரு.சின்னத்துரை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் மற்றும் கல்லூரி பணியாளர்கள் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 02:10:01
Privacy-Data & cookie usage: