பெரம்பலூர்: லாரியில் சென்ற கிளிஞ்சல்கள் தீப்பிடித்தது; தார்பாய் சாம்பலானது; லாரி தப்பியது!

schedule
2026-02-04 | 11:16h
update
2026-02-04 | 11:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The seashells being transported in a lorry caught fire; the tarpaulin was reduced to ashes; the lorry escaped damage!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே நேற்றிரவு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட கிளிஞ்சல்கள் ஒன்றோடு ஒன்றோடு உராய்ந்ததில் தீப்பற்றியதால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதி கடற்கரை கிராமங்களில் சேகரிக்கட்ட முழு கிளிஞ்சல்கள் அழகு பொருட்களாகவும், உடைந்த கிளிஞ்சல்கள் சிமெண்ட் ஆலைக்கு மூலப் பொருட்காளகவும் பொருட்களாகவும் பயன்படுத்த லாரி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டது. அது பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் நேற்றிரவு சென்றுக்கொண்டிருந்த போது லாரியின் மேற்பகுதியில் புகை வருவதை அறிந்த வாகன ஓட்டிகள் லாரி டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர்.

லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு பார்த்தபோது தார்ப்பாய் தீப்பற்றி வழியெங்கும் விழுந்து எரிந்து கொண்டிருந்தன. வழிப்போக்கர்கள் தீயை அணைத்தனர். மேலும், லாரியினுள் இருந்த கிளிஞ்சல்கள் ஊராய்வுகளால் ஏற்பட்ட வெப்பம் கோடைக் காலமாக இருந்தால் டீசல் டேங் வெடித்து பெரும் அசாம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். நல்வாய்ப்பாக வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்ததால் லாரி நிறுத்தப்பட்டதுடன் தார்பாய் தீக்கிரையானதால் லாரி தப்பியது. புகைச்சல் அடங்கிய பின்னர், நள்ளிரவில் லாரி புறப்பட்டு சென்றது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.02.2026 - 11:41:58
Privacy-Data & cookie usage: