Perambalur: The Tamil Nadu government must immediately enact a special law against honor killings; resolution passed at the VCK meeting.
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் விசிக நிர்வாக குழு மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் பெரம்பலூரில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மண்டல செயலாளர் ஸ்டாலின், மண்டல துணைச் செயலாளர் மன்னன், மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க.சண்முகசுந்தரம், வெற்றியழகன், இடி முழக்கம், அய்யாக்கண்ணு, சங்கீதா, கேட் மணி நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலு, காட்டு ராஜா, ஸ்டாலின் லால், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் ஒன்றிய செயலாளர்கள் மாஸ்மணி செந்தில் வளவன், சதீஷ்குமார், இராதாகிருஷ்ணன், கவியரசன், ரவிக்குமார், ஜெகதீசன் நகர செயலாளர்கள் சரண்ராஜ் (கி) இளவரசன் (மே) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆணவ கொலைக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும், தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளில் நடைபெறும் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டிற்கு பெரம்பலூரில் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியளித்தல், அனைத்து கிராமங்களிலும் சுவர் விளம்பரம் எழுதுவது மற்றும் விளம்பர பதாகை வைப்பது, தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்வது, பெரம்பலூர் நகர பொருளாளர் (மேற்கு) திருநாவுக்கரசு அவர்கள் கட்சியின் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் எதிராக செயல்படுவதால் அவரை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எனவே கட்சி நிர்வாகிகள் யாரும் அவரோடு எந்த வித தொடர்பும் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,