பெரம்பலூர்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” செப்.16ல் ஆலத்தூர் வட்டத்தில் நடக்கிறது; கலெக்டர் தகவல்!

schedule
2026-09-10 | 16:15h
update
2026-09-10 | 16:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The “Ungalai Thedi Ungal Ooril” scheme will be held in Alathur Taluk on September 16; Collector announces.

Advertisement

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதி மாதம் 3வது புதன் கிழமை கலெக்டர் (தான்) மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறவுள்ளனர்.
அதன்படி, செப்டம்பர் மாதம் மூன்றாவது புதன்கிழமை உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டம். ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இம்முகாமானது நடைபெறும். அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.09.2026 - 16:38:15
Privacy-Data & cookie usage: