பெரம்பலூர்: அஸ்வின் நிறுவன பங்களிப்பில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்!

schedule
2025-04-21 | 08:37h
update
2025-04-21 | 08:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The work of creating Miyawaki forests in collaboration with Aswin Company; The Collector inaugurated it!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் கிழக்குப்புறத்தின் ஒரு பகுதியாக துறைமங்கலம் ஏரிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் கலெக்டர் கற்பகத்தால் அகற்றப்பட்டு கையகப்படுத்தப்பட்டது. அதில், பெரம்பலூர் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் சார்பில், ரூ. 7 லட்சம் மதிப்பில் கன்றுகள் நடுவது, நீர் பாய்ச்சி, பராமரிப்பு உள்ளிட்ட பங்களிப்போடு சுமார் 3.5 ஏக்கரில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் பணியை இன்று காலை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார். அப்போது, அஸ்வின் நிறுவனர் கே.ஆர்.வி கணேசன், நிர்வாக இயக்குனர் செல்வகுமாரி, சி.இ.ஓ. அஸ்வின், நிஷா, மற்றும் ஏரி, நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவரும், கோயில் அறங்காவலருமான க.கண்ணபிரான், நகராட்சி கமிஷனர் ராமர் மற்றும் வருவாய் மற்றும் அஸ்வின் நிறுவன மேலாளர்கள், பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

Advertisement

1,000 சதுர அடி நிலத்தில் 400 மரங்கள் என்ற அடிப்படையில் மரக் கன்றுகள் நடப்படும். மியாவாக்கி முறையால் பூமியில் வெப்பம் குறையும், காற்றில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும், பறவைகளுக்கு வாழிடம் உருவாகும், பல்லுயிர்ச் சூழல் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 3.5 ஏக்கரில் சுமார் 40,000 மரக்கன்றுகள் நடப்படும். வேம்பு, அசோகா, புளி, மகிழம், நீர் மருது, நாவல், இலுப்பை, மகாகனி, செம்மரம், தேக்கு, கொய்யா, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 40,000 மரக்கன்றுகளை பெரம்பலூர் அஸ்வின் குழுமம் வழங்கியுள்ளது.

மேலும், மியாவாக்கி காடுகளை உருவாக்க வந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலெக்டர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வரும் வரை கடுமையான வெயிலில் காத்திருந்தனர். மேலும், பெண்கள் பலர் கால் வலியால் தலையில் முக்காடு போட்டு அமர்ந்து கொண்டனர். கலெக்டர் கிரேஸ் பச்சாவ் காலதாமதாக சுமார் முக்கால் மணிநேரம் நிகழ்ச்சிக்கு வருவதை பற்றியோ, அங்கு வெயிலில் காத்து வாடுபவர்கள் பற்றியோ ஒரு போதும் வருத்தப்படுபோது போல் தெரியவில்லை. கலெக்டர் என்ற பொறுப்பும் இல்லை. பன்சுவாலிட்டி பற்றியும் தெரியவில்லை.

முதல் முறையில் பரிசீட்சையில் வெல்பவர்களுக்கும், 5, 6 முறை என தேர்வு எழுதி, ஆல் பாசில் வருபவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என வந்தவர்கள் வசைபாடி சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 07:10:04
Privacy-Data & cookie usage: