Perambalur: The youth who stole the bike in broad daylight was handed over to the police by the public
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் பைக்கை திருடியவரை வாலிபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் அருண்குமார் (29). இவர் நேற்று செட்டிகுளம் சென்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு SBI வங்கிக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு வந்து ஒருவர் அவரது பைக்கை திருட முயற்சி செய்து உளளார். இதனைப் பார்த்து அருண்குமார் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரைப் கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரைப்பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் செட்டிகுளத்தை சேர்ந்த முருகேசன் மகன் சிலம்பரசன் (34) என்பது தெரிய வந்தது. இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிலம்பரசனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் பைக்கை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.