பெரம்பலூர்: பஸ் ஸ்டாண்டில் போதை ஆசாமிகளிடம் இருந்து பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க ரோந்து செல்லும் போலீசாரை நியமிக்க வேண்டும்; ஹோம்கார்டுகளுக்கு பதிலாக பயிற்சி பெற்ற பெண் போலீசாரை நியமிக்க கோரிக்கை!

schedule
2026-01-01 | 15:09h
update
2026-01-01 | 15:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: There is a demand to deploy police officers to patrol the bus stand to provide security to passengers from drug addicts; and to appoint trained female police officers instead of home guards!

பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் மதுப்பிரியர்கள், கஞ்சா பிரியர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், புது பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் குழந்தைகளுடன் வரும் பெண்கள், ஆண் பயணிகளிடம் போதையில் இருக்கும் நபர்கள் தேவையில்லாமல் அருவருப்பாக பேசி வசைபாடி வம்பு இழுக்கின்றனர். புகார் தெரிவிக்க சென்றாலும், பஸ்கள் வெளிவரும் பகுதியில் போலீசார்கள் இல்லாமல் ஹோம்கார்டுகள் நிற்பதால் பயணிகள் வம்பு இழுப்பவரிடம் இருந்து காத்து கொள்ள முடியவில்லை. அங்கு பணியில் இருக்கும் ஹோம்கார்டு போலீசாரின் உதவியை நாடி பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் புறக்காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கும் போதுமான போலீசார் பணியில் இல்லாததால் போதையில் இருப்பவர்கள் போலீசாரிடம் அடிக்கிறாயா அடி பார்க்கலாம், ஸ்டேசன் போகலாமா என தைரியமாக பேசுகின்றனர். ஒரே போலீஸ் எப்படி அவரை சமாளிப்பார் என்பதை கருத்தில் கொண்டு பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் ரோந்து அல்லது பொதுமக்கள் கூப்பிடும் தூரத்திற்குள் போலீசாரை லத்தியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பஸ் ஸ்டாண்டிற்குள் பெண் ஹோம்கார்டுகளை பணிக்கு அமர்த்துவதை தவிர்த்து ஆக்டிவான பெண் போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் ஏற்றிவிட வந்த வாலிபரை கஞ்சா போதையில் இருந்த வாலிபர் வம்புக்கு இழுத்து தாக்கினார். பதிலுக்கு அவரும் பாதுகாப்பிற்காக தடுத்து தாக்கினார். பஸ் வெளிப்புறம் இருந்து போலீஸ் அவுட் போஸ்ட்டில் யாரும் இல்லை. அவரது தாயார் புகார் தெரிவிக்க ஓடியும் வேறொரு இடத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஹோம்கார்டிடம் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போதை போலீசான்னா எனக்கு பயமா என வீரவசனம் பேசினார். பெண் ஹோம் கார்டு புறக்காவல் நிலையத்திற்கு ஓடி சென்று தகவல் தெரிவித்தார். ஆனாலும், போதை ஆசாமிக்கு போதைதெளியவில்லை. போலீஸ் மீது இருந்து பயம் தெளிந்து, போலீசிடம் வசனம் பேசிக் கொண்டிருந்தார். இது போன்ற தொல்லைகளில் இருந்து பொதுமக்களை காவல் துறையினர் காக்க முடியவிட்டால் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் அல்லது பவுன்சர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 13:26:59
Privacy-Data & cookie usage: