பெரம்பலூர்: 5 ஆண்டுகள் கடந்தும் நீட்டை ரத்து செய்யாமல் மீண்டும் வாக்கு கேட்டு வீதிக்கு வருபவர்களுக்கு தக்க பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்; அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் பேச்சு!

schedule
2026-04-16 | 11:36h
update
2026-04-16 | 11:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Those who return to the streets seeking votes—five years later—without having repealed NEET must be taught a fitting lesson and sent packing; declares AIADMK candidate Ilambai R. Tamilselvan.

பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காணும் இளம்பை. இரா.தமிழச்செல்வன் நேற்று மாலை பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பெருமைக்குரிய வாக்காள பெருமக்களே, வர்த்தகப் பிரமுகர்களே! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய, தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய வேட்பாளராய் உங்களை நாடி, உங்களைத் தேடி, இருகரம் கூப்பி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிற இந்த நிகழ்ச்சியை எழுச்சியோடு தொடங்கி வைத்திருக்கிற…

மனித புனிதர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மக்கள் தலைவி புரட்சித் தலைவி அம்மா ஆகிய இரு தெய்வங்களின் அரசியலில் இரண்டறக் கலந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அடையாளம்.
முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் வணக்கத்திற்கு அருமை அண்ணன் பா. மோகன் அவர்களே!

மண்ணின் மைந்தர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகத்தின் பொருளாளர் வழக்கறிஞர் பூவை தா. செழியன் அவர்களே!. பாரதிய ஜனதாவின் மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் அவர்களே. முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வராஜ் அவர்களே!, ஒன்றியத் தலைவர் செந்தில்குமார் அவர்களே, நகரத் தலைவர் மருதுதுரை அவர்களே மற்றும் பிற நிர்வாகிகளே!.

இந்த இனிய வாக்குச் சேகரிப்பு நிகழ்ச்சியை மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிற பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் ஆறுமுகம் அவர்களே! பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் சித்தார்த்தன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் பாலசுப்ரமணியம், தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் தலைவர் என்ஜினியர் ரங்கராஜ் நாயுடு, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் அன்புத்தம்பி தேவேந்திர பாலாஜி, குருமன்ஸ் சங்கத்தின் கூட்டமைப்புத் தலைவர் அன்புச் சகோதரர் தேனூர் கிருஷ்ணன், ஊராளி சங்கத்தின் கூட்டமைப்புத் தலைவர்கள், கொங்கு வேளாளர் கூட்டமைப்பின் தலைவர்களே, வேப்பந்தட்டை ஒன்றியத்தின் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.என். சிவப்பிரகாசம் அவர்களே, மாவட்ட துணைச் செயலாளர் நெய்குப்பை துரை அவர்களே! அனைவருக்கும் பலருக்கும் நன்றிகள்.

Advertisement

“உங்கள் வீட்டுப் பிள்ளையான என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று உங்கள் பொற்பாதங்களில் பணிவோடு வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். ஏன் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்? எடப்பாடியார் ஏன் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்?”

ஒரு விவசாயி நாட்டை ஆண்டால்தான் விவசாயியின் கஷ்டம் தெரியும். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது இரண்டு முறை விவசாயக் கடனை ரத்து செய்தார் எடப்பாடியார்!

வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து எடப்பாடியாரை முதலமைச்சராக்கினால், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன், குறுகிய கால மற்றும் மத்திய கால கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். எடப்பாடியார் முதலமைச்சரானவுடன் போடுகிற முதல் கையெழுத்து, ஒவ்வொரு தாயின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 10,000 வரவு வைக்கப்படும் என்பதுதான்.

தந்தையும், மகனும், கடந்த சட்ட மன்ற தேர்தலில், 2021 தேர்தலில் நீட்டி முழங்கினார்களே! நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள், நீட்டின் ரகசியம் எங்கள் கையில் இருக்கிறது’ என்று மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். 5 ஆண்டுகள் நிறைவு செய்தும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டும் மக்களை சந்திக்க வீதிக்கு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஏமாளி அல்ல!! அவர்களுக்கு தக்க பாடம் புகட்டி, குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி ஒரு விவசாயியை கோட்டைக்கு அனுப்ப எளியவனான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்து அவர்களின் டாக்டர் கனவை நனவாக்கியவர் எடப்பாடியார்.

10 ஆண்டு சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தமிழச்செல்வன் கிழித்தார் என்று கேட்கிறவர்களுக்கு சொல்லுங்கள், அவர்களிடம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் ஆற்றிய பணிகளை நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள்:” வேப்பந்தட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் கொண்டு வந்தது அம்மாவின் ஆட்சி. விவசாயிகளின் நீர் மேலாண்மைக்காக விசுவக்குடி பகுதியில் 32 கோடியில் விசுவக்குடி அணைக்கட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

பூலாம்பாடி பகுதியில் வெள்ளையர் காலத்தில் போடப்பட்ட குரங்குத்தோப்பு சாலையைச் சீரமைத்துக் கொடுத்தவர் தமிழ்செல்வன். மேலக்குணங்குடி பகுதி மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொண்டு வந்ததும் அதிமுக ஆட்சிதான். “மேல சீனிவாசபுரம், கீழ சீனிவாசபுரம், பூபதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தந்த உரிமையோடு கேட்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாய், நீங்கள் அழைக்கிற நேரத்தில் ஓடோடி வந்து பணியாற்றுவேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தாருங்கள். உங்கள் வாசல் முற்றத்திலே நிற்கிறேன் நம்பி வாக்களியுங்கள். நன்றி உள்ளவனாக இருப்பேன். இரட்டை இலை சின்னத்திலே வாக்களியுங்கள்!” என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என உங்கள் பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் சின்னம்? (கூட்டம்): இரட்டை இலை! நமது சின்னம்? (கூட்டம்): இரட்டை இலை!
நன்றி, வணக்கம்! என பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் மா.ராணி உள்ளிட்ட வேப்பந்தட்டை ஒன்றியம், பூலாம்பாடிபேரூரை சேர்ந்த தேசிய ஜனநாயக கட்சி பொறுப்பாளர்கள், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வராஜ், பாஜக மாவட்ட பொறுப்பாளர் உமாஹைமாவதி, தவசி. அன்பழகன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். பூலாம்பாடி பேரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்ற அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வனுக்கு பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 11:40:46
Privacy-Data & cookie usage: