பெரம்பலூர்: சட்டவிரோதமாக மது விற்ற மூவர் கைது! 292 மதுபாட்டில்கள் பறிமுதல்!!

schedule
2026-06-28 | 16:33h
update
2026-06-28 | 16:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Three arrested for selling liquor illegally! 292 liquor bottles seized!!

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செட்டிகுளம் பெரியார் நகரைச் சேர்ந்த முகிலன் (32) என்பவர் அனுமதியின்றி பிரியாணி கடை மது விற்பனையில் ஈடுபட்டதை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து10 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இதே போல, நக்கசேலம் கிராமத்தில், பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின்ராஜ் தலைமையிலான போலீசார் நக்கசேலம் டாஸ்மார்க் அருகே உள்ள ஓடை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவர் பீர் பாட்டில்கள் உள்பட 260 மது பாட்டிகளை வைத்து விற்பனை செய்தவரை கையும்களவுமாக பிடித்து நடத்திய விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த கந்தன் மகன் செல்வராஜ் (56), என்பதும், நக்கசேலம் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

கொளக்காநத்தம் பஸ் ஸ்டாப் அருகே சட்டவிரோதமாக மது விற்ற பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த முத்து (80). என்பவரை மருவத்தூர் எஸ்.எஸ்.ஐ ஜாஃபர் அலி கைது செய்ததுடன் அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 22 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குகள் பதிவு செய்த போலீசார் மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 17:16:47
Privacy-Data & cookie usage: