Perambalur: Three goats stolen from a farmer’s pen!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அடுத்துள்ள புதுவிராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி மனைவி கலையரசி (45). விவசாயியான இவர் உபதொழிலாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கலையரசி நேற்று அவருக்கு சொந்தமான 3 ஆடுகளை மேய்ச்சல் முடித்த பின்னர், அவரது சொந்தமான வயலில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு சென்றார். இன்று காலை கலையரசி வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 3 ஆடுகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசில் கலையரசி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆடுகளை திருடிய மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருடப்பட்ட ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் இருக்காலாம் என கூறப்படுகிறது.
பாடாலூர் பகுதியில் ஆடுகளை களவாடும் சம்பவங்கள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ள சம்பவம் அப்பகுதி ஆடுகள் வளர்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,