பெரம்பலூர்: டைட்டானிக் கப்பல் கண்காட்சி

பொழுதுபோக்குடன் கூடிய பொருட்காட்சி; நாளை நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தொடங்கி வைக்கிறார்!!

schedule
2025-04-17 | 17:20h
update
2025-04-17 | 17:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Titanic ship exhibition & entertainment fair; Municipal Chairman Ambika Rajendiran to inaugurate tomorrow!!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் சாலையில், பாலக்கரை அருகே தனியார் மைதானத்தில் டி.ஜே அம்யூஸ்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் , டைட்டானிக் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கண்காட்சி பொருட்காட்சியை நடத்தி வருகிறது. நாளை 18-04-2025 முதல் வரும் 08-06-2025 வரை 52 நாட்கள் நடக்கிறது. இதனை நாளை மாலை நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தொடங்கி வைக்கிறார். மேலும், நகரின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisement

கடலில் செல்லும் கப்பலை தத்துரூபமாக தரையில் வடிவமைத்துள்ளனர். காண்பவர்கள் வியக்கும் வண்ணம் அச்சு அசல் போல் தோற்றம் அளிக்கிறது. அதோடு மட்டும் அல்லாமல், கப்பலுக்குள் எப்படி இருக்கும் என்பதையும், டைட்டானிக் கப்பலை அச்சு அசல் தோற்றத்தில் தர்பார் மண்டபம், கேப்டன் கேபின், மேலும் டைட்டானிக் குறித்த பெரும்பாலான தகவல்களை காட்சிப்படுத்தி பல விசயங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் தனி இடத்தை ஒதுக்கி உள்ளனர்.

ஒவ்வொரு கலைஞனிடமும் உள்ள ஏதாவது திறமை ஒன்று மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. அந்த வகையில் இந்த பொருட்காட்சியினர் பொழுதுபோக்கும் விதாமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் மகிழும் விதமாகவும், ராட்டினம், பேய் வீடு, மோட்டார் சைக்கிள் சாகசம் போன்ற நிகழ்ச்சிகளும், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்டால்கள், உணவு வகைகளையும் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தினேஷ் தெரிவித்தார். மேலும், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணி முதல் 9.30 வரையிலும், சனி, ஞாயிறு நாட்களில் மாலை 4 மணி முதல் 9.30 மணி வரையிலும், தினசரி செயல்படும் என்றும் இரவை பகலாக்கும் வண்ணவிளக்குளால் கண்காட்சி முழுவதும் மக்களின் மனதை கொள்ளைகொண்டு குதுகலத்தை உண்டாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 10:13:52
Privacy-Data & cookie usage: