பெரம்பலூர்: தேர்தலில் வெற்றி பெற, எடைக்கு எடை நாணயங்கள் கோயில் உண்டியலில் செலுத்தி வழிபட்ட முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன்!

schedule
2026-03-17 | 08:43h
update
2026-03-17 | 08:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: To ensure victory in the election, former MLA Tamilselvan offered worship by depositing coins equal to his own body weight into a temple offertory Hundi.

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ-வாக கடந்த 2011 முதல் 2021 வரை இருந்தவர் எளம்பலூரை சேர்ந்த ஆர். தமிழ்ச்செல்வன். இவர் கடந்த தேர்தலில் அக்கட்சியின் உள்கட்சி பூசலால் வெற்றி பெற வேண்டியவர் பின்னடைவை சந்தித்தார். தற்போது, அதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும், வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளருக்கு விண்ணப்ப மனுவையும் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை, பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளிம்மன் கோயிலுக்கு வந்து சிறப்பு பூசைகள் நடத்தி அருள்மிகு மதுரகாளியம்மனை வழிப்பட்டார். பின்னர், அவருடைய உடல் எடை அளவிற்கு சுமார் 62 கிலோ 700 கிராம் எடையளவு கொண்ட 1 ரூபாய் நாணயங்களை கோயில் உண்டியலில் செலுத்தி காணிக்கையாக செலுத்தினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தான் அமோக வெற்றி பெறவும், வேண்டுதலை நிறைவேற்றவும் மதுரகாளியம்மனை மனமுருகி வழிப்பட்டார். முன்னாள் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணாபுரம் கணேசன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் உடனிருந்தனர். கோயில் பணியாளர்கள் உண்டியலில் பணத்தை செலுத்த உதவி செய்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 17:49:33
Privacy-Data & cookie usage: