பெரம்பலூர்: மக்கள் தொகை கணக்கெடுப்பு சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி; கலெக்டர் தகவல்!

schedule
2026-08-27 | 16:03h
update
2026-08-27 | 16:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Toll-free telephone number for queries regarding the census; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் 8 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியின் முதற்கட்டப்பணியான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி முடியும் தருவாயில் உள்ளது. பணியின் போது பொதுமக்களின் வீடுகள் ஏதேனும் கணக்கெடுப்பு அலுவலரால் கணக்கெடுப்பு செய்யப்படாமல் விடுபட்டிருப்பின் சம்மந்தப்பட்ட பொறுப்பு அலுவலர்களின் அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு தெரிவிக்கப்படும் தகவல்கள் தனிப்பதிவேட்டில் பராமரிக்கப்பட்டு அப்பகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட கணக்கெடுப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்பேரில் கணக்கெடுப்பு அலுவலர் விடுபட்ட வீடுகள் கணக்கெடுப்பினை உறுதி செய்ய தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி கடைசி நாள் 30.08.2026.

Advertisement

எனவே, இந்த வாய்ப்பினை தவற விடாமல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் அனைவரும் பங்கு கொண்டு, தங்களது வீடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டதை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக எழும் அனைத்து சந்தேகங்களுக்கும் கட்டணமில்லா தொலைப்பேசி எண் “1855” மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான CENSUS உதவி மைய எண் “04328 225888” என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 16:33:20
Privacy-Data & cookie usage: