Perambalur, Tomorrow Electricity Consumer Redressal Meeting: Day Announcement
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 11மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெறுகிறது.
இந்தக்கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என அறிவிப்பு செய்துள்ளார்.