பெரம்பலூரில் நாளைய நிகழ்ச்சிகள் (சேவைச் செய்திகள்)

schedule
2016-04-19 | 19:19h
update
2026-06-23 | 01:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூரில் நாளை ஏப்.21 ம் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்:

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு:

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் நாம் தமிழர் கட்சி நெ.அருண்குமார் முகமது பட்டினம், லாடபுரம், நக்கசேலம் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

Advertisement

இதே போல, குன்னம் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ப.அருள் முருக்கன்குடி பகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.


பா.ம.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு:

பா.ம.க பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் சத்தியசீலன் நாளை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு பணியை துவக்குகிறார். அங்கிருந்து துறைமங்கலம் உள்ளிட்ட பெரம்பலூர் நகரத்தில் வாக்கு சேகரிக்கிறார். பின்னர், மாலை வேப்பநதட்டை வட்டத்தில் உள்ள அனுக்கூரில் வாக்கு சேகரிக்கிறார்.

திருவிழாக்கள்:

கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள மூப்பனார் கோவில் திருவிழா நிறைவு விழாவையொட்டி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

கை.களத்தூர் அருகே உள்ள அய்யனார்பாளையம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு பட்டிமன்றம் நடக்கிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 01:50:46
Privacy-Data & cookie usage: