Perambalur: Traders’ syndicate; TVS State Secretary R. Rajachidambaram petitions Arun Nehru MP demanding that the central government procure maize!
தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர். ராஜாசிதம்பரம், பெரம்பலூர் எம்.பி அருண் நேருவிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 31 வகையான வேளாண்மை விளைப்பொருள் விலை நிர்ணய ஆணயம் மூலம் ஆண்டுதோறும் விலை நிர்ணயம் இந்திய பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 25.02.2025 அன்று 2025-2026ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு விலை நிர்ணயப்படி மக்காசோளத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2400/ கொள்முதல் விலையாக அறிவித்த விலையில் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யவில்லை.
கோழி மற்றும் மாட்டுத் தீவனத்திற்கு மக்காசோளம் தனியார் தீவன வியாபாரிகள் விவசாயிகளிடம் குவிண்டாலுக்கு ரூ.1600/- விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தற்பொழுது அந்த விலைக்கு கூட வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 76120 ஹெக்டேர் நிலத்தில் மக்காசோளம் சாகுபடி செய்ததில் 475750 மெட்ரிக் மக்காசோளம் விளைச்சல் என வேளாண் அதிகாரிகள் கணக்கு எடுத்துள்ளனர்.
மத்திய அரசு இந்திய தேசிய கூட்டுறவு சந்தைப்படுத்துதல், கூட்டமைப்பு NAFED மூலம் மக்காசோளத்தை வியாபரிகளிடம் கொள்முதல் செய்தது. தற்பொழுது 2025-2026ஆம் ஆண்டு பருவத்திற்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தும், மக்காசோளத்தை நபார்ட் கொள்முதல் செய்யவில்லை. இதனை வலியுறுத்தி பெரம்பலூர் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பாக 18.02.2025 பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. எனவே தாங்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு இந்திய தேசிய கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நபார்ட்) மூலம் மக்காசோளத்தை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கேட்டுக் கொள்கின்றோம் என்றும்,
மேலும் தனியார் தீவன நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு குவிண்டால் ரூ.1600/- கொள்முதல் செய்து வருவதை தடுத்திட அந்த நிறுவனங்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி குவிண்டால் ரூ.2400/-க்கு மக்காசோளத்தை கொள்முதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம், என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.