பெரம்பலூர்: ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி;. கலெக்டர் தகவல்!

schedule
2025-08-28 | 12:26h
update
2025-08-28 | 12:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Training for Adi Dravidians and tribals for German language exam; Collector’s information!

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing), பொது நர்சிங் மற்றும் மருத்துவ டிப்ளமோ (GNM Diploma) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 21 முதல் 35 வயதிற்குள்ளும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3. லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 9 மாதங்களாகும். மேலும், விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும்.

Advertisement

இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2,50,000/- முதல் ரூ.3,00,000/-வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 04328 -276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 16:32:54
Privacy-Data & cookie usage: