பெரம்பலூர்: எஸ்.சி., எஸ்.டி இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில் நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி ; கலெக்டர் தகவல்!

schedule
2025-09-08 | 13:25h
update
2025-09-08 | 13:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Training for the main examination for Adi Dravidian and tribal students who have passed the Group 1- 2025 primary examination; Collector information!

தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில் நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test & Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம் (PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program ) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

Advertisement

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு ,சோதனை மற்றும் பறக்கும் தொழில் நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test & Flying) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதெனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம் (PCB Designing Program) மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப் படிப்பில் (Diploma) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

மேற்கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு
www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 12:06:36
Privacy-Data & cookie usage: