பெரம்பலூர்: கலெக்டர் தலைமையில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு!

schedule
2026-04-27 | 16:00h
update
2026-04-27 | 16:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Training Session for Census Officials Led by the District Collector!

பெரம்பலூர் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் மிருணாளினி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில், 2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்ட அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு முதற்கட்டமாக மக்கள் தொகை இயக்குநரக இணை இயக்குநர் ஜெகதீசன், துணை இயக்குநர் சுனிதா, புள்ளியியல் ஆய்வாளர் வினய் முரளி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

இக்கூட்டத்தில் கலெக்டர் மிருணாளினி தெரிவித்ததாவது: “மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்கால திட்டமிடலுக்கு அடிப்படையாகும். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படையானதாகும். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்கள், தகவல்களை துல்லியமாக சேகரிக்க வேண்டும் என தெரிவித்தார். அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2026 - 17:44:13
Privacy-Data & cookie usage: