Perambalur: Trichy Police IG Balakrishnan inspects places including the police station!
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் உள்ள பண்டக சாலை, உடற்பயிற்சி நிலையம், பெரம்பலூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் உள்ள பதிவேடுகள், CCTNS 2.O மற்றும் வரவேற்பாளர் அறை மற்றும் மாவட்ட காவல் அலுவலக பண்டக சாலை ஆகியவற்றை பார்வையிட்டு அந்தந்த அலுவலக அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பதிவேடுகள் மற்றும் பராமரிப்புகள் குறித்து தகுந்த அறிவுரை வழங்கினார். பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி அனிதா, ஏ.டி. எஸ்.பி கோபாலசந்திரன் மற்றும் பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபு மற்றும் தனிப்பிரிவு போலீசார் உள்பட பலர் உடனிருந்தனர்.