பெரம்பலூர்: த.வெ.க செயல்வீரர்கள் கூட்டம்; அதிக வாக்குகளில் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை வெற்றி பெற செய்ய முடிவு!

schedule
2026-03-02 | 16:27h
update
2026-03-02 | 16:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: TVK activists meet; Decision made to ensure that the assembly constituency candidate with the highest number of votes wins!

பெரம்பலூர், துறையூர் சாலையில் உள்ள முத்துகிருஷ்ணா திருமண மண்டபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:

Advertisement

நாம் சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தலில் ஆண்ட கட்சி, ஆளுகின்ற கட்சிகளை ஓரம் கட்டி விட்டு நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு நமது தலைவர் விஜயை முதல்வராக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், மேலும், நமது தளபதி விஜய் கூறியது போன்று ஊழல் இல்லாத ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் பாடுபடுவோம் என்றும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நிற்கும் தவெக வேட்பாளர்ளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட இணை செயலாளர் ரேகா ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் முத்தமிழ் செல்வன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா முத்துக்குமார், துணை செயலாளர்கள் சசிகுமார், ஈஸ்வரன், மாவட்ட மகளிர்அணி பொறுப்பாளர் தேவ சாந்தி, செயற்குழு உறுப்பினர்கள் மல்லிகா இளங்கோவன், முத்துமாரி, தமீம் அன்சாரி, இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் சின்னதுரை, ராமகிருஷ்ணன், மணிகண்டன், வினோத், புருஷோத்தமன், புஷ்பராஜ், குரும்பலூர் பேரூர் செயலாளர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னதாக நகர செயலாளர்கள் வில்லு விஜய் அனைவரையும் வரவேற்று பேசினார். இறுதியாக பெரம்பலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வினோத் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 22:53:35
Privacy-Data & cookie usage: