பெரம்பலூர்: தடை உத்தரவை மீறி மது விற்ற 2 பேர் கைது; போலீசார் நடவடிக்கை!

schedule
2026-08-15 | 15:12h
update
2026-08-15 | 15:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Two arrested for selling liquor in violation of the ban order; police take action!

சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை பயன்படுத்தி, கண்ணப்பாடி மற்றும் செட்டிக்குளம் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை நடப்பது கிடைத்த தகவலின் பாடாலூர் போலீசார்
தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

கண்ணப்பாடி வனப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து வந்த திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் திருத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் (60) என்பவரை மடக்கிப்பிடித்தனர். அப்போது விற்பனை செய்து கொண்டிருந்த 13 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர், செட்டிகுளம் ஒயின் ஷாப் அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதை அறிந்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அரப்பலி மகன் தமிழ்செல்வன் (48) என்பவர் மதுப்புட்டிகளை பதுக்கி விற்றது தெரியவந்தது. தமிழ்செல்வனையும் போலீசார் கைது செய்து விற்பனைக்கு இருந்த 7 மதுபுட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பாடாலூர் போலீசார் தமிழ்செல்வன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மணிமாறன், தமிழ்செல்வன் இருவரிடம், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 15:38:03
Privacy-Data & cookie usage: