பெரம்பலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மொபட் ஓட்டி வந்த இரு சிறுவர்கள் பலி!

schedule
2024-04-25 | 13:05h
update
2024-04-25 | 13:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Two boys who were driving a moped were killed in a collision with an unidentified vehicle!

பெரம்பலூர் அருகே இரு சிறுவர்கள் சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள வேங்கடத்தூனரை சேர்ந்தவர் ராஜா, இவர் பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நித்திஷ் (14) . வேங்கடத்தூனில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை அவனது நண்பனான கவுள்பாளையத்தை சேகர் மகன் கோகுல் (13). இருவரும் அதே ஊரில் வசித்து வரும் சீரங்கன் மகன் முருகேசன் (40), என்பவரின் மொபட்டை எடுத்துக் கொண்டு, பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் அருகே வேலை செய்யும் ராஜாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து விட்டு, திரும்பவும் கவுள்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். சிறுவர்கள் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை நெடுவாசல் பிரிவு அருகே கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

Advertisement

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவர்கள் மீது, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிறுவர்கள் இடம் வாகனத்தை ஓட்ட கொடுக்க கூடாது என சட்டம் வலியுறுத்தினாலும், சுமூக பொறுப்புடன் பொதுமக்கள் கண்டிக்காதவரை இழப்புகளை தடுக்க முடியாது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 11:27:53
Privacy-Data & cookie usage: