Perambalur: Two Women Attacked; 25 Sovereigns of Gold Jewelry and ₹12,000 in Cash Robbed! Police Investigation Underway.
பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் கிராமத்தில், இஸ்லாமியர் தெருவில் ரேசன் கடை அருகே வசிக்கும், சையதுஜாபர் மனைவி தாராபீ (65), அவரது மெத்தை வீட்டில் தனது மகள் அஷரப்பீ (29), என்பவருடன் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் தகர்த்தெறிந்து உள்ளே புகுந்த டவுசர் கொள்ளையர்கள் 4 பேர் கத்தியை காட்டி மிரட்டியதுடன், இரும்பு ராடால் தலையில் தாக்கி 25 பவுன் தங்க நகைகளையும், 12 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியோடி தலைமறைவாகினர்.
கொள்ளை சம்பவத்தின் போது டவுசர் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு பயந்து, நகை இருக்கும் இரண்டு பீரோக்களில் ஒரு பீரோ சாவியை மட்டும் கொடுத்த தாராபீ மற்றொரு சாவியை கொடுப்பதற்குள் மயங்கி விழுந்ததால் அதிலிருந்த 13 பவுன் தங்க நகையும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் தாப்பியது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தின் மையப் பகுதியில் நிகழ்ந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் வாலிகண்டபுரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.