Perambalur: Two workers killed after sleeping in front of a JCB machine!
பெரம்பலூர் அருகே குரும்பலூர் – பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் சத்தீஸ்கர் மாநிலம், கன்கர் மாவட்டத்தை ரடிராம் சோரி மகன் ரூபேஷ்குமார் (25) மற்றும் ஸ்ரீ ராம்லால் மகன் டக்கீஸ்வர் (21) ஆகிய இரு இளைஞர்களும், பாளையத்தில் தங்கி போர்வெல் லாரியில் வேலை பார்த்து வந்தனர். வழக்கம் போல் நேற்றிரவு வேலை முடித்து விட்டு வந்த இவர்கள்பெட்ரோல் பங் பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி முன்பு தூங்கினர். இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தம்பிரான்பட்டியை சேர்ந்த ஜேசிபி டிரைவர் சந்தோஷ்குமார் இரண்டு பேர் தூங்குவதை கவனிக்காமல் ஜேசிபியை இயக்கி எடுத்து சென்று விட்டார். அப்போது, அங்கிருந்தவர்கள் பார்த்த போது தொழிலாளர்கள் சேர்ந்த ரூபேஷ், டக்கீஸ்வர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் ரூரல் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர்களின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் ஜேசிபி டிரைவர் சந்தோஷ்குமாரை கைது செய்து இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்கு பிழைப்பிற்காக வெளிமாநிலங்களில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த வாலிபர்கள் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.