Perambalur: Unannounced power cuts; young friends are suffering—unable to study or sleep! DMK and AIADMK regimes seem better in comparison!
பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி மணிக்கு ஒருமுறை ஒவ்வொரு மணி நேரமும், நிறுத்தி நிறுத்தி மின்வினியோகம் செய்யப்படுவதால் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் பெரும்பாலும் 120க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டுள்ளது. மாலை மற்றும் முன் இரவு நேரங்களில், பல நாட்களாக தொடர்ந்து எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் மின்வெட்டு நடப்பதால் பொதுமக்கள் சி.எம் அங்கிளுக்காக வீட்டில் தாத்தா, பாட்டி, பெற்றோர்கள், வீட்டை சுற்றி உள்ளவர்களிடம் ஓட்டு கேட்ட குட்டி நண்பா, நண்பீஸ் படிக்க முடியாமலும், ஹோம் ஒர்க்குகளை முடிக்க முடியாமலும், தூங்க முடியாமலும் கோடைக்காலம் கோல வீசும் வெப்பத்தாலும், கொசுக்கடியாலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பெண்கள் சமையல் வேலையை உரிய நேரத்தில் முடிக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். வசதி உள்ளவர்கள் ஜெனரேட்டர் அல்லது யுபிஎஸ்-யை வைத்துக் கொள்கின்றனர். ஆனால், எளிய மக்களுக்கு இது சாத்தியமில்லை. நாளுக்கு நாள் இந்த அறிவிக்கப்படாத மின் வெட்டு மாலை தொடங்கி விட்டு விட்டு நள்ளிரவு வரை நீள்கிறது. இதனால், கிராமப் பகுதியினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கடந்த அதிமுக, திமுக ஆட்சியில் மின்சார உற்பத்தியில் மின் மிகை மாநிலமாக இருந்தது. தற்போது ஏற்படும் மின்வெட்டுக்களை பார்க்கும் போது தவெக அரசு மின்துறையில் பின்னடைவை சந்தித்து வருகிறதா என்ற அச்சம் பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இனி வரும் நாட்களில் தங்கு தடையின்றி மின்வினியோகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வீடுகளில் குழந்கைளிடம் பெரியவர்கள் உங்க அங்கிளுக்கு ஓட்டுபோன சொன்னீர்கள், இப்ப எப்படி கரண்ட் கட்டை எப்படி அவருக்கு தெரிவிப்பீர்கள், அவர் மட்டும் தான் உங்களிடம் வீடியோவில் பேசுவார், நீங்கள் அவருக்கு வீடியோவில் பேசமுடியாதா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.