பெரம்பலூர்: முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் கீழ் ரூ. 37 கோடியில் 4 வழிச்சாலை பணிகள் எம்.எல்.ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்!

schedule
2026-02-25 | 12:49h
update
2026-02-25 | 12:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Under the Chief Minister’s Road Development Scheme, MLA Prabhakaran inaugurated the 4-lane road works at a cost of Rs. 37 crore!

பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.23 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர் புறவழிச்சாலை மற்றும் ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூர் – பெரம்பலூர் சாலை ஆகிய சாலைகளில் மையத்தடுப்பான் அமைத்தல் மற்றும் இருபுறமும் தார்சாலை அகலப்படுத்தும் பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் இன்று தொடங்கி வைத்தார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.23 கோடி மதிப்பில் பெரம்பலூர் புறவழிச் சாலையில் 3.875 கி.மீ.தொலைவிற்கும், ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில் 2.200 கி.மீ தொலைவிற்கும் 2 வழித்தடத்திலிருந்து 4 வழித்தடமாக அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல், பாக்ஸ் கல்வெர்ட் அகலப்படுத்துதல், தடுப்புச் சுவர் கட்டுதல், சாலை சந்திப்பு மேம்படுத்துதல் மற்றும் மையப் பாதுகாப்புச் சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இன்றி பேருந்துகள் கனரக வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையிலும், வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்ளவும் பெரிதும் வசதியாக இருக்கும்.

அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சித் துணைத்தலைவர் ஆதவன், பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்ரமணியன், ஒப்பந்ததாரர்கள் டி.ஆர்.ஆர். மற்றும் தழுதாழை பாஸ்கர் உள்பட நெடுஞ்சாலைத்துறையினர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2026 - 04:53:31
Privacy-Data & cookie usage: