பெரம்பலூர்: பண்ணை வாயில் திட்டத்தில், விவசாயிகளின் வயலிலேயே ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உதவியுடன் விளைபொருட்களை விற்பனை செய்யலாம்; கலக்டர் தகவல்!

schedule
2026-01-06 | 14:05h
update
2026-01-06 | 14:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Under the ‘Farm Gate’ scheme, farmers can sell their produce right in their fields with the help of the regulated market; Collector informs.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் விவசாயிகள் தங்களுடைய மக்காச்சோளம் மற்றும் இதர வேளாண் விளைபொருட்களை தரகு, கமிஷன் மற்றும் எவ்விதமான பிடித்தமும் இன்றி மின்னணு எடைத்தராசுகள் வாயிலாக சரியாக எடையிட்டு விற்பனை செய்யலாம். இதற்காக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலமாக மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த இ-நாம் திட்டத்தில் விவசாயிகள் இரண்டு விதமாக தங்களது விளைபொருட்களை விற்பனை செய்யலாம். முதலாவதாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து இங்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று தங்களது விளைபொருட்களை விற்பனை செய்யலாம். ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வர இயலாத விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டத்தில் உள்ள பண்ணை வாயில் (Farm Gate) முறையில் விவசாயிகளின் வயலிலேயே விற்பனைக்கூடம் உதவியுடன் விற்பனை செய்யலாம்.

மேலும், விபரங்களை தெரிந்து கொள்ள பெரம்பலூர் விற்பனைக்குழு தலைமை அலுவலக மேலாளர் பிரதிபா – 9500881667, பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், மேற்பார்வையாளர் ஜோ.வினோத் – 9790198566 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விளைபொருட்களை விற்று பயன்பெறுமாறு கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 13:05:51
Privacy-Data & cookie usage: