பெரம்பலூர்: “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம்; கலெக்டர் அறிவிப்பு!

schedule
2024-11-18 | 16:45h
update
2024-11-18 | 16:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “Ungalai Thedi Ungal Ooril” Project Camp; Collector Notice!

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதிமாதம் 3வது புதன்கிழமை கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

Advertisement

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் -2024 மாதம் மூன்றாவது புதன் கிழமை (20.11.2024) அன்று “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் படி, பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் முகாம் நடைபெறவுள்ளது.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்குதடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் எதிர்வரும் 20.11.2024 புதன் கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளனர்.

 எனவே பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திகக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.08.2026 - 00:49:13
Privacy-Data & cookie usage: