Perambalur: Unidentified Male Body Found Near Wine Shop; Police Investigate!
போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து பெரம்பலூர் போலீசில் தமிழ்பிரியா என்பவர் புகார் அளித்தார். அதில், இறந்தவர் தனது கணவர் கபாலி (40), என்றும், குடி போதைக்கு அடிமையானதால் கடந்த 5 வருடங்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இது குறித்து போலீசார் மேலும், கபாலி எப்படி இறந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.