பெரம்பலூர் ஒன்றிய திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

schedule
2020-11-20 | 13:43h
update
2020-11-20 | 13:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Union DMK Booth Agents Consultative Meeting

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ். அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இந்த கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் கலந்துகொண்டு, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், போலியான வாக்காளர்களை கண்டறிந்து நீக்கம் செய்தல், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல், வருகிற சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா .துரைசாமி, மாநில மருத்துவரணி துனைச் செயலாளர் டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ப.செந்தில்நாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து ஹரிபாஸ்கர் , வாக்குச்சாவடி பாக முகவர்கள் , ஊராட்சி கழகச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 21:54:29
Privacy-Data & cookie usage: