Perambalur: Vacancy in Sub-Jail; Announcement!
பெரம்பலூர் கிளைச் சிறையில் காலியாக உள்ள ஒரு தூய்மை பணியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு எழுத, படிக்க தெரிந்தவர்கள் 01.07.2027 அன்று 18 வயதிற்கு மேற்பட்டு SCA / SC / ST 35 வயதிற்குட்பட்டவர்கள், MBC/ BC 32 வயதிற்குட்பட்டவர்கள். OC – 30 வயதுக்குட்பட்டவர்கள், (GT –GL Others – Non – Priority – 1 நபர்) தெரிவு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது. தூய்மை பணியாளர் பதவி ஊதிய விகிதம் Level – (15700 – 50000) – Rs-15700/-ஆகும்.
எனவே, தூய்மை பணியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை 30.09.2026 அன்று மாலை 05.00 மணிக்குள் திருச்சிராப்பள்ளி மத்திய சிறை, சிறைக் கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.