பெரம்பலூர் வள்ளலார் கேட்டரிங் சர்வீஸ்

பார்ட்டி ஹால் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது

schedule
2018-03-14 | 07:00h
update
2018-03-14 | 07:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Vallalar Catering Service & Party Hall Opening Ceremony! This evening is going on !!

பெரம்பலூர் வள்ளலார் குழுமம், ஹலோ பிளாக், ஈகோ பிரிக்ஸ் உள்ளிட்ட கட்டுமான துறையிலும், இரு சக்கர மோட்டார் வாகன விற்பனை உள்ளிட்ட தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்றொரு புதிய தொடக்கமாக சுத்தம், சுகாதார முறையில் , நாவிற்கினிய உணவு வகைகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள், வணிகம், கட்டுமானம், அலுவலகளுக்கு சிறந்த முறையில் உணவு பதார்த்தங்களை தயாரித்து வழங்கவும், உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு திருமணம், காதணி, மஞ்சள் நீராட்டு விழா, மற்றும் நிறுவனங்களின் பார்ட்டிகளுக்கு ஏற்ற வகையில் 500 பேர் அமரும் வகையில் காற்றோட்டமான, இயற்கை அழகு கூடிய பார்ட்டி ஹால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு வீடுகளுக்கே நேரடியாக சூடான சுவையான உணவு வழங்கப்பட உள்ளது. இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்து.

Advertisement

பெரம்பலூரில் முதன்முறையாக குறைந்தது 5 பேருக்கு ஆர்டர் செய்தாலே டோர் டெலிவரி செய்யப்படும் என வள்ளலார் கேட்டரிங் சர்வீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை இதன் திறப்பு விழா வள்ளலார் குழுமம் நிறுவனர் ஆர்.ஜெயராமன் தலைமையில் இந்நிகழச்சி இன்று மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் தீரன் நகர் எதிர் புறம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே நடக்கிறது.

முதன்மை சமையல் கூடத்தினை தனலட்சுமி சீனிவாசன் குழுமத் தலைவர் அ.சீனிவாசன் திறந்து வைக்கிறார். திறந்தவெளி சமையல் கூடத்தினை அஸ்வின் குழுமத்தை சேர்ந்த கே.ஆர். வரதராஜன் திறந்து வைக்கிறார். கூட்ட அரங்கத்தினை ரோவர் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர். கே.வரதராஜன் திறந்து வைக்கிறார். உணவு அருந்தும் கூடத்தினை ராமக்கிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டாக்டர்.எம். சிவசுப்பிரமணியன் திறந்து வைக்கிறார். மேலும், இந்நிகழ்வில், திருச்சி – சென்னை வள்ளலார் போர்வெல்ஸ் நிறுவனர் கே.பத்மநாபன், பாரத் டிரான்ஸ்போர்ட் கே.என்.ஜெயராமன், ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, சிவகாமம் மோட்டார்ஸ் நிறுவனர் ஆ.கலியபெருமாள், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் மு.இராஜாராம், எல்.ஐ.சி., சீனியர் பிஸ்னஸ் அசோசியேட் ஹெச்.ஷேக்தாவூத், அம்மன் ரியல் எஸ்டேட் நிறுவனத் தலைவர் பி.மனோகரன், அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் கே.ஆர்.வி. கணேசன், 007 டிஜிட்டல் கலர் லேப் மு.இமயவரம்பன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி ஆசி வழங்க உள்ளனர். ஆர்டர் புக்கிங்களுக்கு 8110051204, 8110091204 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை வள்ளலார் குழும நிர்வாக இயக்குனர் ஜெ.அரவிந்தன் மற்றும், ராஜசேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 01:47:24
Privacy-Data & cookie usage: