பெரம்பலூர்: லாரி மீது வேன் மோதி விபத்து; டிரைவர் பலி!

schedule
2025-12-19 | 06:56h
update
2025-12-19 | 06:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Van collides with a lorry; driver killed!

பெரம்பலூர் அருகே இன்று காலை லாரியும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில், வேன் டிரைவர் பரிதாபமாக உயிழந்தார்.

Advertisement

மதுரையில் இருந்து சென்னைக்கு சரக்கு லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. லாரியை கிருஷ்ணசாமி மகன் செல்வராஜ் (38) ஓட்டிச்சென்றார். லாரி பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே சென்னையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, வேன் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி காலண்டர்களை ஏற்றி சென்றது. அதனை விருதுநகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சந்திரமோகன் (28) ஓட்டிச் சென்றார். முன்னே சென்ற லாரி மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் சந்திரமோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபாக உயிரிழந்தா.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன சந்திரதமோகனின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 08:21:08
Privacy-Data & cookie usage: