Perambalur: Various parties pay tribute to Indian freedom fighter Nallakannu!
இந்திய சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு நேற்று காலமானார். அதனையொட்டி, இன்று அவருக்கு புகழ் அஞ்சலி கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் வேணுகோபால், செல்லத்துரை, ரமேஷ், ஜெயராமன், ஞானசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர் எசனை ராமர் மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் அவரின் தியாகம், எளிமை குறித்து புகழஞ்சலி கூட்டம் நடத்தினர்.
இதில் ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு நல்லகண்ணுவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.