Perambalur: VCK leader Thol. Thirumavalavan’s second mother Thol. Sellammal passes away! Tribute to important personalities!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 2ம் தாயார் தொல்.செல்லம்மாள் (78) இன்று காலை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சையின் போது காலமானார். அவருக்கு தொல். திருமாவளவன் மலரஞ்சலி செலுத்தினார். மண்டல பொறுப்பாளர் கிட்டு, மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் ரத்தினவேல், கடலூர் திராவிட மணி, அரியலூர் சிவகுமார், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் , அரசு வழக்கறிஞர் மாலதி திருக்குமரன் உள்பட பலர் உடனிருந்தனர். மேலும், விசிக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏக்கள், கட்சியினர் தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் பலர் தொல்.செல்லம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.