பெரம்பலூர்: வெங்கனூர் விருத்தாசலேஸ்வர கோயில் சோமவார பூஜையில் ஆதிதிராவிடர்கள் பங்கேற்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; விசிக கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2026-09-27 | 15:00h
update
2026-09-27 | 15:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: VCK meeting passes resolution urging the Hindu Religious and Charitable Endowments Department to take action to enable Adi Dravidars to participate in the Somavara Puja at the Venganur Viruthachaleswarar Temple.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம் வெங்கனூர் கிராமத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேர்களை தேடி (மக்களை தேடி) நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் வெற்றியழகன்,இடி முழக்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யாக்கண்ணு தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கடைகளை பொது ஏலம் விட வேண்டும். உடும்பியம் பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து அவற்றை நிலமற்ற மக்களுக்கு வழங்க வேண்டும், வெங்கனூரில் உள்ள விருத்தாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் சோமவர பூஜையில் ஆதிதிராவிடர் மக்கள் பூஜை நடத்துவதற்கு இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், வெங்கனூரில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெங்கனூரில் ஆதிதிராவிடர் சமூக இளைஞர்கள் பயன் பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், கிருஷ்ணாபுரத்தில் உள்ள வட்டார அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தீர்மானங்கள் நிறைவேற்ற்பட்டன.

Advertisement

மாவட்ட பொருளாளர் பிச்சை பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் அ.இ.அழகுமுத்து, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், காட்டு ராஜா, ம.வி.இ மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், இ.சி.எ.பா மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அய்யம்பெருமாள், வெங்கனூர் கிராமத்தின் புதிய கிளை செயலாளர் ஜெயராமன், கிளை பொருளாளர், சுதாகர், துணை கிளை செயலாளர்கள், வெங்கடேசன், விக்னேஷ், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறையின் கிளைச் செயலாளர் தமிழரசன், கிளை பொருளாளர் ராஜசேகர், துணை கிளை செயலாளர்கள் அய்யப்பன் கலையரசன் மகளிர் விடுதலை இயக்கத்தின் கிளை செயலாளர் செல்வி, கிளை பொருளாளர் செல்லம், துணை கிளை செயலாளர்கள் கீர்த்திகா, கலைச்செல்வி ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இவர்களுக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து விளக்கவுரை ஆற்றினார்.

மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல துணை செயலாளர் மன்னர் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பெரம்பலூர் கிழக்க நகர செயலாளர் தென்றல்.சரண்ராஜ், பேரூர் செயலாளர் விஜய வர்மன், ராசாத்தி குமார், அம்பேத்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். . முன்னாள் கிளை செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.09.2026 - 15:32:17
Privacy-Data & cookie usage: