பெரம்பலூர்: அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட ரோவர் பொறியியல் கல்லூரி கட்டிடங்களை அகற்ற கோரி விசிக கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2026-08-06 | 15:46h
update
2026-08-06 | 15:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: VCK passes resolution demanding the removal of Rover Engineering College buildings constructed on government poramboke (unassessed/public) land.

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி விசிக சார்பில், வருகிற ஆகஸ்டு 17 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன் மற்றும் முதன்மைச் செயலாளர் (ம.வி.இ) வழக்கறிஞர் ஆதிமொழி ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டின் நோக்கம், தமிழ்தேசிய அரசியல், இயக்க வளர்ச்சி மற்றும் அமைப்புப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், வரும் ஆக. 17 அன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவளன் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுமார் 100 வாகனங்களில் பெருந்திரளாக கலந்து கொள்வது, பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி, அரசின் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

Advertisement

நாரணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் கிரஷர் தொழிற்சாலைகளால் ஏற்படும் தூசி மற்றும் காற்று மாசுபாடு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கும் விபத்திற்கும், பெரும் அபாயத்திற்கும் உள்ளாகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இயங்கும் கிரஷர்களை தடை செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டப் பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் அ.இ.அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க. சண்முகசுந்தரம், அய்யாக்கண்ணு, வெற்றியழகன், இடிமுழக்கம், கேட் மணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காட்டு ராஜா, ஸ்டாலின் லால், மகளிர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் ரேணுகா வேல்முருகன், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலாளர் அய்யம்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மண்டலச் செயலாளர் ஸ்டாலின், மாநிலச் செயலாளர் வீரசெங்கோலன், மண்டல துணைச் செயலாளர் மன்னர் மன்னன், மாநிலச் செயலாளர் (கருத்தியல் பரப்பு) ரத்தினவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) தமிழ்குமரன், மாநில துணைச் செயலாளர் (மு.மா.க) அம்பேத் கோகுல், மாநில துணைச் செயலாளர் (வழக்கறிஞர் அணி) மணிமாறன், மாநில துணைச் செயலாளர் (ம.வி.இ) செல்லம்மாள் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

ஒன்றியச் செயலாளர்கள் மாஸ் மணி, சதீஷ்குமார், செந்தில்வளவன், ராதாகிருஷ்ணன், வடிவேல், பழனிமுத்து, கவியரசன், வெற்றிவேல், பாடாலூர் ரவிக்குமார், நகரச் செயலாளர்கள் சரண்ராஜ் (கிழக்கு), தங்க. இளவரசன் (மேற்கு), முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் மனோகரன், பாஸ்கர் மற்றும் சத்தியகலா, ரம்யா, காமராஜ், தயாளன், சாக்கியவர்ணன் பிரகாஷ், சேரன், சுவான்ராஜ், ஜீவா, அருட்செல்வம், அழகுதான், ரவி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் பங்கேற்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.08.2026 - 16:13:10
Privacy-Data & cookie usage: