பெரம்பலூர்: பஞ்சமி நிலமீட்பு போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை-க்கு விசிக மலர் தூவி வீரவணக்கம்!

schedule
2026-10-10 | 16:18h
update
2026-10-10 | 16:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: VCK pays floral tributes and a heroic salute to Panchami land reclamation activists John Thomas and Ezhumalai!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை, அரச வன்கொடுமைக்கு பலியான பஞ்சமி நிலமீட்பு போராளிகள் ஜான் தாமஸ் மற்றும் ஏழுமலை ஆகியோரின் நினைவு நாளையொட்டி விசி கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவட்ட பொருளாளர் பிச்சைபிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் அ.இ.அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க.சண்முகசுந்தரம், வெற்றியழகன், சங்கீதா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் காட்டுராஜா, பாக்கியராஜ் , ம.வி.இ மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், இ.சி.எ.பா மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அய்யம்பெருமாள் மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல துணை செயலாளர் மன்னர் மன்னன், கருத்தியல் பரப்பு மாநில செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல், மு.மா.க மாநில துணைச் செயலாளர் அம்பேத் கோகுல், தொண்டரணி மாநில துணைச் செயலாளர் சபரீசன், ஒன்றிய செயலாளர் மாஸ் மணி, கிழக்கு நகர செயலாளர் சரண்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், மனோகரன், மருவத்தூர் கதிரவன், வேலுசாமி, ராஜேந்திரன் பழனி முருகன், ஆட்டோ முரளி உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.10.2026 - 16:41:38
Privacy-Data & cookie usage: