பெரம்பலூர்: திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி-யை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2026-05-22 | 14:34h
update
2026-05-22 | 16:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: VCK stages protest condemning DMK Deputy General Secretary A. Raja, MP

திமுவை சேர்ந்த ஆ.ராசா எம்.பி டிவிட்டர் வலைதளத்தில் சில பதிவுகளை வெளியிட்டு இருந்தார். மேலும், விசிகவை சேர்ந்த வன்னியரசு அமைச்சரவையில் இடம் பெற்றார். இதில் ஏற்பட்ட முரண்பாட்டால் ஆத்திரம் அடைந்த விசிகவினர் ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 50 மேற்பட்ட விசிக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் செய்தியாளர்க்கு அளித்த பேட்டி:

தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலே, மிக இழிவான சொற்களை, மிகவும் கேவலமான சொற்களைப் பயன்படுத்தி, நாங்கள் த.வெ.க.வோடு (தமிழக வெற்றிக் கழகம்) அமைச்சரவையில் சேர்ந்ததற்காக அவர் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இது போன்ற பதிவுகளையே அவர் பதிவிட்டு வருகிறார்.

​இதை அவர் தொடர்ந்து பதிவிடக் கூடாது. இந்த மாதிரிப் பதிவிட்டால், நாங்கள் தமிழ்நாடு முழுவதும் அவரைக் கண்டித்து, மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும். நாங்கள் நட்போடும், நீண்ட நாட்களாக அவர்களோடு பயணித்தும் உள்ளோம். இனிமேலும், அதுபோன்ற நட்போடு இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

​ஆனால், எங்கள் மக்களின் குமுறல்களைக் கேட்டுத்தான் எங்கள் தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவருக்காக இந்த முடிவை எடுக்கவில்லை. நாங்கள் அனைவரும் அவரை வற்புறுத்திய பிறகுதான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தொண்டர்களின் முடிவைத்தான் தலைவர் எடுத்துள்ளார். எல்லா… எல்லாக் கட்சியிலும் தலைவர்களின் முடிவே இறுதியானதாக இருக்கும். ஆனால், எங்கள் தலைவரைப் பொறுத்தவரைக்கும் தொண்டர்களின் முடிவுகளால்தான் அமைச்சரவையில் சேர்ந்தார்; தொண்டர்களின் அழுத்தத்தால்… அழுத்தத்தால்தான் அமைச்சரவையில் சேர்ந்தார்.

​’ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பது நாங்கள் 1999-இல் எழுப்பிய முழக்கம். அதுவே இன்று நிறைவேறியிருக்கிறது என்று நாங்கள் மனதளவில் மிகச் சந்தோஷமாகவும், குடும்பத்தோடு ரொம்ப மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வேளையில், ராஜாவின் பதிவு எங்கள் அனைவருடைய மனதையும் புண்படுத்திவிட்டது. அதனால், அவர் தொடர்ந்து இது போன்ற பதிவுகளைப் பதிவிடக் கூடாது. இனிமேலும் பதிவிட்டால், நாங்கள் மிக வீரியமாகப் போராடுவோம் என்று கூறிக்கொள்கிறேன். ​இன்று முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக நாங்கள் அறிவித்திருந்தோம். ஆனால், அதை நடத்தாமல் இங்கே ஒரு கண்டன ஆர்ப்பாட்டமாக நடத்தி முடித்துள்ளோம். அதற்கான எதிர்ப்பை, ஓர் அடையாள எதிர்ப்பாகத் தெரிவித்துள்ளோம்.

Advertisement

கேள்வி: ஆ. ராசாவின் இந்தப்பதிவிற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் முதலில்?

​பதில்: ஆ. ராசா அவர்கள் தன்னிச்சையாக அந்தப் பதிவைப் போடவில்லை. ஆண்ட சாதிகளின் கைக்கூலியாக ராசா இதைப் பதிவிட்டிருப்பாரோ என்று நாங்கள் கருதுகிறோம். அவர் இதைப்போன்று தொடர்ந்து செயல்படுகிறார். அந்தக்கட்சியின் இவர் ஒரு வேலைக்காரர் மாதிரி வைத்துக்கொண்டு, இது போன்ற தலித் தலைவர்களுக்கு, சமூகப் போராளிகளுக்கு எதிரான பதிவுகளைப் போடுவதற்கு அவரைத் தூண்டிவிடுகிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

​கேள்வி: இதற்குப் பின்னால் திமுகவின் தலைமைதான் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

​பதில்: இதற்குப் பின்னால் திமுகவின் தலைமைதான் இருக்க வேண்டும்.

​கேள்வி: இப்போது திமுகவின் கூட்டணியில் இத்தனை நாளாக விசிக பயணம் செய்திருக்கிறது. இதுவரைக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்காதவர்கள், இந்தத் தேர்தலிலும் ஜெயித்திருந்தாலும் இடம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?

​பதில்: நாங்கள் 1999-இல் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்பதை ஐயா மூப்பனார் அவர்களின் கூட்டணியில் சேர்ந்தபோது நாங்கள் அறிவித்தோம், எங்கள் தலைவர் அறிவித்தார். அது இன்று கிட்டி வரும்போது, நாங்கள் அதைப்புறந்தள்ளிப் போக முடியாது. என் இழிநிலையில் இருக்கும் இந்தச் சமூகத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். அது ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது, நாங்கள் தவறவிடக் கூடாது என்பதற்காக எங்கள் தலைவர், எங்கள் தொண்டர்களின் மனநிலையைப் புரிந்துதான் இந்த முடிவை எடுத்தாரே ஒழிய, எங்கள் தலைவரின் இஷ்டம் தன்னிச்சையான பதிவு, இது கிடையாது. எங்கள் தலைவர் பதவிக்கோ, புகழுக்கோ ஆசைப்படாதவர். அவரைப் பொறுத்தவரைக்கும் இந்த மக்களின் நலன் மட்டுமே முக்கியமாக நினைக்கிறவர். அமைச்சர் ஆ. ராசா போன்றவர்கள் வந்து பதவிக்காக அந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். எங்கள் தலைவர் போன்றவர்கள் அந்த மாதிரி பதவிக்காக இல்லை. ​ஆனாலும், எங்கள் மக்கள் விருப்பப்படுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரைக்கும் எங்கள் தலைவர் தான் அமைச்சர் ஆக வேண்டும் என்று நாங்கள் எல்லாரோடும் விருப்பமாகவும் இருந்தது. தலைவர் இன்னும் ஆகவில்லை. பன்னீர்செல்வன் அவர்களும் எங்கள் துணைப் பொதுச்செயலாளர்தான். எங்கள் தலைவரின் மனசாட்சி தான். அவரை ஆக்கியிருக்கிறோம். இது… இதுநாள் வரைக்கும் ஆட்சியில் பங்கு என்பதே ஒரு கெட்ட வார்த்தையாகவும், கொச்சை வார்த்தையாகவும் நினைத்தவர்கள் தான் அண்ணா திமுகவும், திமுகவும்.

​கேள்வி : இப்போது இந்தப்பிரச்சனையினால் திமுகவிற்கும் விசிகவிற்குமான விரிசல் அப்படி என்று எடுத்துக்கொள்ளலாமா இந்தப்பிரச்சனையை?

​பதில் : விரிசல் இல்லை. இது வந்து அந்த இயக்கத்தில் இருக்கும் ஆண்ட சாதிகளின் ஒருவிதமான கெட்ட, விஷமத்தனமான ஒரு செயல்பாட்டுதான்.

​கேள்வி: அப்படியென்றால் அதைத் தடுத்திருக்க வேண்டும் அல்லவா, மு.க. ஸ்டாலின் அதற்கான குரல் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா, ஏன் கொடுக்காமல் போனார்?

​பதில்: கொடுக்காமல் போனது அவருடைய தவறு. நாங்கள் இவ்வளவு நாள் வந்து சமூக நீதியும், இந்த நாட்டின் மதவாத சக்திகள் வந்துவிடக் கூடாது என்று அவர்களோடு இருந்தோம். ஆனால், அவர்கள் வந்து எங்கள் தலைவர் வந்து ஒவ்வொரு நாளும் யோசித்து யோசித்து இந்த மக்களுக்கான விடைகளுக்காகத்தான் ஒவ்வொரு விஷயமும் செய்கிறார்களே ஒழிய, சடனாக எடுத்த உடனே எதையும் செய்துவிடுவதில்லை. எங்கள் தலைவரைப் போன்ற தலைவர் எங்களுக்குக் கிடைப்பது அரிது. அதனால் எல்லா தலைவர்களும் கிடைப்பார்கள், எங்களுக்குத் தலைவர்கள் கிடைக்க மாட்டார்கள். அதனால் எங்கள் தலைவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் எப்போதும் கட்டுப்பட்டவர்கள், என அவர் தெரிவித்தார்.

ந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க.சண்முகசுந்தரம், வெற்றியழகன், ஜெயவர்த்தனே, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தழுதாழை பாலு காட்டு ராஜா பாக்கியராஜ், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள், நகர செயலாளர் தங்க.இளவரசன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மதியழகன், மாஸ் மணி, சதீஷ்குமார், வெற்றிவேல், கவியரசன், மாநில துணை செயலாளர் நடராஜன், மேனாள் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், பாஸ்கர், பாலன், புஷ்பராஜ், பால் நிலவன், புஷ்பராஜ், ராஜேந்திரன், மாரிமுத்து, செல்வகுமார், வினோதன், விஜயன்,ஆனந்தன், வர்ணன், ஆழ்வார், தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 03:43:34
Privacy-Data & cookie usage: