Perambalur: Vehicles frequently crash into the central median on the Attur Road! Highway authorities negligent!
பெரம்பலூர் புறநகரில் உள்ள பெரம்பலூர் – ஆத்தூர் சாலை மற்றும் பெரம்பலூர் – துறையூர் சாலை செஞ்சேரி அருகே போதிய எச்சரிக்கை செய்யும் சமிக்கை விளக்குள் பொருத்தப்படாததால் பெங்களூர் மற்றும் கரூர், நாமக்கல் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிக விபத்துக்குள்ளாகின்றன. இதனால், பயணிகள், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், தொடர்ந்து பல விபத்துக்கள் நடந்து லாரி பஸ்கள் கவிழ்ந்தாலும். நெடுஞ்சாலை துறையினர் எதையும் கண்டு கொள்வதில்லை. கட்டிங்கில் மட்டும் குறியாக இருக்கும் நெடுஞ்சாலை துறையில் அவர்களுடைய பணியை முழுமையாக செய்யாததாலேயே விபத்துகளுக்கு காரணமாகின்றன. இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து தஞ்சாவூர் வழியாக மன்னார்குடி சென்ற தனியார் பேருந்திற்கு சாலையில் முறையான எச்சரிக்கை செய்யும் சமிக்கை விளக்குகளோ, ஒளிரும் பதாகைகளோ இல்லாத காரணத்தால் சென்டர் மீடியன் சிமெண்ட் கட்டையில் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க டயர் கழண்டு விழுந்தது. நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது போன்று கடந்த சில ஆண்டுகளாக விபத்துகள் தொடர்ந்து நடந்து வந்த போதிலும், நெடுஞ்சாலையினர் அலட்சியம் தொடர்ந்து நடந்து வருகிறது.
கவனக்குறைவாகவும், பணியில் மெத்தனமாகவும் செயல்படும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை தவெக அரசு பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.