பெரம்பலூர்: வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்: போலீசார் அறிவிப்பு!

schedule
2024-12-23 | 14:01h
update
2024-12-23 | 14:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Vehicles seized in cases to be auctioned: Police announcement!

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1 நான்கு சக்கர வாகனம், 40 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 41 வாகனங்கள் தற்போது உள்ள நிலையில் பொது ஏலம் வருகின்ற 27.12.2024-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு, பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்ட் ஆதர்ஷ் பசேரா தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பாலமுருகன் முன்னிலையில் ஏலம் விடப்பட உள்ளது.

இந்த பொது ஏலத்தில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு நான்கு ரோடு திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது 9498159272, 9498162279, 7904136038 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

மேலும் ஏலம் எடுக்க வரும் நபர்கள், ஏலத்தில் கலந்து கொள்ள வாகனங்களுக்கு ரூ. 2000/- முன் தொகையாக செலுத்தி தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அடையாள எண் கொண்ட சீட்டு வழங்கப்படும். பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

உடனிருப்பவர்களுக்கு அனுமதி கிடையாது. அதிகபட்ச விலைக்கு வாகனங்களை ஏலத்திற்கு எடுத்தவர்கள் ஏலத்தொகை (GST)-யுடன் சேர்த்து பிற்பகல் 03.00 மணிக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தாங்கள் செலுத்திய டெபாசிட் தொகை கழித்துக் கொள்ளப்படும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் தாங்கள் கட்டிய டெபாசிட் தொகையை திருப்பித் தரப்படமாட்டாது என்றும், ஏலம் ரூபாய் 100-ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும். வாகனத்துடன், வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். பதிவு செய்து வழங்க இயலாது எனவும், ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும், பொது ஏலத்தில் காவல் துறையைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை,

வாகனங்களை 26.12.2024-ம் தேதி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேரில் சென்று பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் எடுத்து வரவேண்டும். ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நபர்கள் 26.12.2024 -ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00-க்குள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நான்கு ரோடு, திருவள்ளுவர் தெரு, பெரம்பலூரில் முன்அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.08.2026 - 18:29:20
Privacy-Data & cookie usage: