பெரம்பலூர்: படைவீரர் கொடிநாள் வசூல் தொடக்கம்!

schedule
2023-12-07 | 15:42h
update
2023-12-07 | 15:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Veterans Flag Day Collection Begins!


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை டி.ஆர்.ஓ வடிவேல் பிரபு கொடிநாள் நிதிஅளித்து, தொடங்கி வைத்தார்.

Advertisement

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திருமண நிதியுதவி உள்ளிட்ட திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு ரூ.3,21,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,
மேலும், இராணுவத்திற்க்கு ஒரு மகன் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மகன்களை இராணுவப்பணிக்கு அனுப்பிய 2 பெற்றோருக்கு வெள்ளிப் பதக்கங்களையும், 2022ம் ஆண்டின் கொடிநாள் இலக்கினை எய்திய 49 மாவட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் டி.ஆர்.ஓ வடிவேல் பிரபு வழங்கினார். அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 07:33:45
Privacy-Data & cookie usage: