பெரம்பலூர்: அதிமுக புதிய மாவட்ட செயலாளராக VGM @ வெங்கடாசலம் நியமனம்!

schedule
2026-06-25 | 18:08h
update
2026-06-25 | 18:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: VGM @ Venkatachalam appointed as the new AIADMK District Secretary!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக புதிய மாவட்ட செயலாளராக வி.ஜி.எம் @ வேப்பூர் வெங்கடாசலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் துணை சபாநாயகரும், அமைச்சருமான வரகூர் அ.அருணாச்சலம் தலைமை நிலையச் செயலாளராகவும், முன்னாள் பெரம்பலூர் எம்.பி ஆர்.பி மருதைராஜா, கழக அமைப்புச் செயலாளராகவும், முன்னாள் எம்.பி சந்திரகாசி கழக கொள்கை பரப்புச் செயலாளராகவும், வி.ஜி.எம் @ என்.வெங்கடாசலம் பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும், நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்.

புதிய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் நேரில் சால்வை, பொன்னாடைகள் அணிவித்து, வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 18:34:07
Privacy-Data & cookie usage: