பெரம்பலூர்: பிரிந்து சென்ற மனைவியை கணவன் காரில் கடத்தி சென்ற வீடியோ வைரல்; மகள் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை!

schedule
2026-04-28 | 08:43h
update
2026-04-28 | 08:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Video of Husband Abducting Estranged Wife in Car Goes Viral; Police Launch Intensive Investigation Based on Daughter’s Complaint!

பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் அவரது கணவர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பலால் வலுக்கட்டாயமாக காரில் கடத்தப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், து.களத்தூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெருமாள்(48), செல்வராணி(43), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, ரம்யா கீர்த்தனா என்ற 2மகள்களும், ரஞ்சித் என்ற ஒரு மகனும் இருந்தனர்.

இதனிடையே பெருமாள் வேலைக்காக வெளிநாடு (மாலத்தீவு) சென்ற நிலையில், குழந்தைகள் மூவருடன் தேனூர் கிராமத்தில் வசித்து வந்த செல்வராணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் மூத்த மகள் ரம்யா உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

இதனிடையே குடும்பத்துடன் வசிக்கலாம் என கடந்த 2021ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய பெருமாளின் வருகையால் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாகி பெரும் பிரச்சனையாக மாறி நிலையில், இளைய மகள் கீர்த்தனாவிடம் அவரது தந்தை தவறாக நடந்து கொண்டதாக போக்சோ வழக்கில் கைதாகி பெருமாள் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் 2022ஆம் ஆண்டு கணவனைப் பிரிந்த செல்வராணி அவரது இளைய மகள் கீர்த்தனாவுடன் பெரம்பலூர் கோல்டன் நகரில் உள்ள கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.

மகன் ரஞ்சித் அவரது பாட்டி வீட்டில் வசித்து வரும் நிலையில், பெருமாளிடமிருந்து, செல்வராணி பிரிந்து சென்று விட்டதால் மனமுடைந்த அவரது மூத்த மகள் ரம்யா தனது 6 மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாடகை வீட்டின் உரிமையாளர் கலியபெருமாளின் சகோதரர் மகேஷ்குமாருடன் கீர்த்தனாவுக்கு பழக்கம் ஏற்பட்டதால், செல்வராணியின் சம்மதத்துடன் கீர்த்தனா மகேஷ்குமாரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தலைமறைவான செல்வராணியையும் இளைய மகள் கீர்த்தனாவையும் காணவில்லை என பெருமாள் தேடி வந்த நிலையில், கலியபெருமாள் பாதுகாப்பில் இருப்பதை அறிந்து கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் போலீசாருடன் சென்று அவர்களை அழைத்து வர முற்பட்டதில், கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என செல்வராணி தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெருமாள்- செல்வராணி தம்பதியரின் இளைய மகள் கீர்த்தனா தனது தாய் செல்வராணியை தந்தை பெருமாள், அவரது நண்பர் இளவரசன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் நேற்றிரவு வலுக்கட்டாயமாக ஒரு காரில் கடத்தி சென்று விட்டதாகவும் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரை மீட்டு தரும்படியும் ஆடியோ பதிவு ஒன்றையும், சிசிடிவி காட்சி பதிவுகளையும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது கணவனின் சகோதரர் கலியபெருமாள் மூலம் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் கீர்த்தனாவை பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து நடந்து என்ன? என்றும், தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பெண்மணி ஒருவர் வலுக்கட்டாயமாக காரில் கடத்தப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் அதிகாலையில் வைரலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 09:30:45
Privacy-Data & cookie usage: