Perambalur: Vigilance Police Conduct Surprise Raid at Sub-Registrar Office; Inquiry Launched into Unaccounted Cash!
பெரம்பலூர் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே மதரசா சாலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் வீட்டுமனை மற்றும் நிலங்களை விற்பது வாங்குவது தொடர்பான பத்திரம் பதிவு செய்ய வரும் பொது மக்களிடம் அதிக அளவில் கையூட்டு வாங்குவதாக பெரம்பலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து இன்று மாலை சுமார் 4:30 மணி அளவில் பெரம்பலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஹேம சித்ரா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட போலீசார் திடீரென இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கணக்கில் வராத பணம் ரூ. 13500 கைப்பற்றப்பட்டது. இந்த சோதனை சுமார் 4 மணி நேரம் நடந்தது. இந்த திடீர் சோதனையினால் இனை சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.