பெரம்பலூர்: நொச்சிக்குளம் ஊராட்சி செயலரை கண்டித்து, கிராம மக்கள் யூனியனில் ஆபிசில் முற்றுகையிட்டு தர்னா!

schedule
2024-12-06 | 14:08h
update
2024-12-06 | 14:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Villagers stage a sit-in protest at the union office in protest against the Nochchikulam Panchayat Secretary!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நொச்சிக்குளம் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் கலையரசி என்பவர் பொதுமக்களை ஒருமையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மக்கள் நல பணியாளர் சித்ரா என்பவரை தரக்குறைவாக பேசிதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், ஊராட்சி செயலாளர் கலையரசியை வேறு ஊருக்கு பணியிட மாற்றம் செய்யக்கோரியும் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 16:41:05
Privacy-Data & cookie usage: