பெரம்பலூர்: சென்னையில் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் மாணவரின் குரல் நிகழ்ச்சி; மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்!

schedule
2026-10-08 | 07:09h
update
2026-10-08 | 07:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: ‘Voice of the Student’ event in Chennai featuring Rahul Gandhi; District Youth Congress members campaign for the event.

நீட் தேர்வு பிரச்சினை, வினாத்தாள் கசிவு , கல்விக் கொள்கையில் இருக்கும் குளறுபடிகள் மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் மாணவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்து குறித்து கேட்கும் நிகழ்ச்சி வரும் அக்.10-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக அளவில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி தலைமையில் கட்சியினர் பெரம்பலூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மாணவர்களின் குரல் நிகழ்ச்சி குறித்து எடுத்துரைத்தனர். பின்னர், அதனை தொடர்ந்து செல்போன் மூலம் க்யூ-ஆர் கோடை ஸ்கேன் செய்து மாணவ, மாணவிகள் தங்கள் வருகையை ஆர்வமுடன் பதிவு செய்தனர். இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் சென்னை சென்று ராகுல் காந்தியை சந்திக்க ஆர்வம் காட்டி வருவதாகவும், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வன், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் தங்கவேல், இளைஞர் காங்கிரஸ் பெரம்பலூர் சட்டமன்ற தலைவர் ஆனந்த், குன்னம் சட்டமன்ற தலைவர் பார்த்திபன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.10.2026 - 07:30:28
Privacy-Data & cookie usage: